குளிர் காலங்களில் பெரும்பாலானோரின் சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான தட்பவெப்பநிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்து விடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், போன்றவை வெளிப்படுகின்றன.
தேன் :
unknown nodeதேன் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். பால் சரும செல்களை புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். எனவே, இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் சரும வறட்சியை தடுப்பதுடன் சருமத்தின் நிறமும் கூடும்.
கற்றாழை :
unknown node3 டேபிள் ஸ்பூன் கற்றாழை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, நன்கு கிளறிச் சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம். வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து கலந்து தடவி வந்தால் சருமம் புதுப்பொலிவுடன் வறட்சியின்றி இருக்கும்.
நெல்லிக்காய் :
unknown nodeநெல்லிக்காயை அரைத்து போடி செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்துக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடனே முகம் பொலிவாக காணப்படுவதுடன் சரும செல்களும் புத்துணர்ச்சி பெறும்.