KFC ஸ்டைல் மொறு மொறு சிக்கனின் ரெசிபி இதோ..!

சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. அதிலும் KFC பிரைட் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகள் முதல் பெரியவர் வை அனைவராலும்

சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. அதிலும் KFC பிரைட் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகள் முதல் பெரியவர் வை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும்.

இதனை உண்பதற்காக உணவகங்களுக்கோ அல்லது ஆர்டெர் செய்யவோ இனி தேவையில்லை. சுவையான மொறு மொறு KFC ஸ்டைல் சிக்கனை வீட்டிலையே எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இதுல பார்ப்போம்.

KFC ஸ்டைல் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

500 கிராம் சிக்கன்

2 டேபிள் ஸ்பூன் பூண்டு

2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்

கருப்பு மிளகு தேவையான அளவு

தண்ணீர் தேவையான அளவு

3 கப் மைதா மாவு

4 முட்டைகள்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில்2 டேபிள் ஸ்பூன் பூண்டு, 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், கருப்பு மிளகு தேவையான அளவு, 3 கப் மைதா மாவு மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நாகு கிளறி எடுத்துக் கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்துல் 4 முட்டை மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து நாகு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் 500 கிராம் சிக்கனை எடுத்து முட்டையுடன் கலந்து எடுக்கவும்.

முட்டையுடன் கலந்து எடுக்கப்பட்ட சிக்கனை ஒவ்வொரு துண்டுகளாக கிளறி வைத்துள்ள மாவு பாத்திரத்தில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிக்கன் துண்டுகள் நன்கு மூல்குமாறு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் சூடான பிறகு ஒவ்வொரு துண்டுகளாக சிக்கனை எண்ணெயில் போட்டு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் வெந்து வரும் வரை அதனை கரண்டியால் பிரட்டவோ’ கிளரவோ கூடாது.

இல்லையெனில் சிக்கனின் மேல் உள்ள மாவுகள் தனி தனியே பிரிந்துவிடும்.

சிக்கன் நங்கு பதமாக வெந்தவுடன் அதனை டிஷ்யூ பேப்பரிலோ அல்லது சாதாரண எண்ணெய் வடிக்கும் பாத்திரத்திலேயே சிறிது நேரம் வைத்து எடுத்தால் சூடான சுவையான மற்றும் மொறு மொறுபண KFC ஸ்டைல் சிக்கன் ரெடி.