கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. உங்கள் சந்தேகத்திற்கு இதோ பதில்…,
சத்துக்கள் :
முட்டையில் கனிமச்சத்து, வைட்டமின், கால்சியம், இரும்புசத்து மற்றும் பாசபர்ஸ போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளது.
unknown nodeகோடைகாலத்தில் சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது சரியான கருத்து இல்லை என சமையல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வெப்பத்தை குறைக்கிறது :
unknown nodeகோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பாத்தை குறைக்கலாம். முட்டையிலுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், கோடையில் உடலில் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை சீராக வைத்து கொள்ள உதவுகின்றது.
ஆற்றலை தக்க வைக்கிறது :
unknown nodeமுட்டை உடலில் உள்ள ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் ஏற்படும் உடல் மற்றும் பலவீனத்தை தடுக்கிறது. முட்டையை குறைவான எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதும் உடலுக்கு நல்லதல்ல.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு :
unknown nodeவெயில் காலத்தில் அளவுக்கு அதிகமான முட்டையை எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும். கோடைகாலத்தில் முட்டையை நன்கு வேகவைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. வெயில் காலத்தில் அசைவ உணவுகளை குறைத்து கொள்வது மிகவும் நல்லதாகும்.