இளம் நரையை அடியோடு போக்கும் இலந்தை இலை….!!!

Default Image

இயற்கை இறைவன் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக இறைவன் படைத்த இயற்கை நமக்கு கை கொடுக்கிறது. இந்த விதத்தில் இலந்தை இலை இளம் நரையை போக்க கூடிய ஆற்றல் கொண்டது.

பசியுணர்வு :

Image result for பசியுணர்வு :

பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, செரிமானம் இல்லாமல் கஷ்டபடுபவர்களும் இலந்தை பழத்தின் விதையை நீக்கி விட்டு, பலசத்தையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலையும், மாலையும், 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கான பிரச்சனை :

Related image

பெண்களுக்கு மாதவிலக்கு காங்களில் ஏற்படும், உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கையு தடுக்கவும் இலந்தை பழம் பயன்படுகிறது. கால்சியம் சத்து, இலந்தை பழத்தில் அதிகம் இருப்பதால், எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும், சத்து இழப்புக்களை ஈடு செய்யும்.

இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன், 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து, மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால், கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி, வலி குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.

இளம் நரை :

Image result for இளம் நரை :

இலந்தை இலையை மை போல் அரைத்து, பூசி வந்தால், தலையில் ஏற்படும் புழுவெட்டு நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து, அதனை உள்ளங்கை, உள்ளங்காலில் பூசி வந்தால், அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

இளம் நரையை போக்கும் தன்மை, இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி, 10 நிமிடங்கள் வரை ஊற விட்டு அலசினால், இளநரை மாறும். மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், மூளை புத்துணர்வு பெரும்.

மூளை பிரச்சனை :

Related image

ஒரு கைப்பிடி இலந்தம் பழத்தை ஒரு லிட்டர். தண்ணீரில் போட்டு, அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து, படுப்பதற்கு முன், அருந்தி வந்தால், மூளை புத்துணர்ச்சி பெரும். பற்கூச்சம் மற்றும் இரத்தக் கசிவு உள்ளவர்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்