இந்தியாவில் கொரோனாவிலிருந்து 2.92 கோடி பேர் குணமடைவு..!

In India, 50,040 people have been infected with a corona in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,258 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,02,33,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,258 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,95,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,944  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,86,403 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 32,17,60,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.