அடடே… கொய்யா இலை டீ உடல் எடையை குறைக்குமா…? பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலை டீ…!!!

Guava leaf tea

கொய்யா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கொய்யா இலையில் பல சத்துக்கள் உள்ளது. கொய்யா மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.

கொய்யா இலையில் உள்ள சத்துக்கள் :

‘கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்ற சத்துக்கள் உள்ளது. கொய்யா இலையில் துவர்ப்பு தன்மை உடையது.

கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் Quercetin போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலை இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. இதில் Carotenoids மற்றும் Flavonoids அதிகம் உள்ளன.

கொய்யா இலை டீ :

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு நீரினை நன்றாக கொதிக்க வைத்து அதில் 5 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கொதிக்கும்போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி, டீத்தூள், ஏலக்காய், சீரகம் போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து, தேவையான அளவு நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் கொய்யா இலை டீ ரெடி. நன்றாக வடிகட்டி காலை, மாலை இருவேளையும் அருந்தலாம்.

உடல் எடை: 

கொய்யா இலையை தேநீராக உட்கொள்ளும் போது, உடல் எடை குறைய இது உதவுகிறது.  இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay