உங்க மேனி பளபளப்பாக மின்ன வேண்டுமா அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க !

கோடைகாலத்தில் நமது சருமம் பல வகையான நோய்களில் பாதிக்கபடுகிறது.ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகிற்காக எவ்வளவு விஷயங்கள் செலவு செய்தாலும்

கோடைகாலத்தில் நமது சருமம் பல வகையான நோய்களில் பாதிக்கபடுகிறது.ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகிற்காக எவ்வளவு விஷயங்கள் செலவு செய்தாலும் நமக்கு நிரந்தர தீர்வு என்பது நமக்கு கிடைக்க வில்லை.

கோடைகாலத்தில் பல வகையான சரும பிரச்சனையில் இருந்து நமது சருமத்தை பாதுக்காக்க இந்த ஜூஸை குடிங்க.

தேவையான பொருட்கள் :

பப்பாளி பழம் -1 கப்

சர்க்கரை (அ) பனகற்கண்டு -3 ஸ்பூன்

காய்ச்சி ஆறவைத்த பால் -1/2 கப்

ஐஸ் குயூப் -3

செய்முறை :

unknown node

பப்பாளி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து பானக்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து நன்கு சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனை ஜூஸ் கப்பில் ஊற்றி ஐஸை போட்டு பரிமாறவும்.

நன்மைகள் :

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளி ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.இது உடலுக்கு பல வகையான சத்துக்களை கொடுக்கிறது.

இந்த ஜூஸை தினமும் குடித்தால் அது சருமத்தில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.