அடடே.... இது தெரியாம போச்சே....!! வால்நட்ஸின் வியக்கத்தகு மருத்துவ குணங்கள்....!!!

வால்நட்டிற்கு அக்ரூட், வாதுமைப் பருப்பு என பெயருண்டு. வால்நட் எனப்படும் அக்ரோட் கொட்டை பல மருத்துவ குணங்களைக்கொண்டது. இது பல நோய்களை குணமாக்கி, உடல்

வால்நட்டிற்கு அக்ரூட், வாதுமைப் பருப்பு என பெயருண்டு. வால்நட் எனப்படும் அக்ரோட் கொட்டை பல மருத்துவ குணங்களைக்கொண்டது. இது பல நோய்களை குணமாக்கி, உடல் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய மிக சிறந்த வியக்கத்தகு மருத்துவ குணங்களை கொண்டது.

unknown node

முந்திரி, பாதாம் உள்ளிட்ட  சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் பொது வால்நட்டில் தான் ஆண்டி – ஆக்சிடண்ட்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

உடல் பருமன் :

unknown node

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடலில் உள்ள கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

unknown node

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்திற்கு வகை செய்கிறது.

மாரடைப்பு :

unknown node

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது. இதனால் தான் கடுங்குளிரில் காலை நேர, நடைப்பயிற்சிக்கு பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்த பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனால் ஆறு மாதங்களில் கேட்ட கொலஸ்ட்ராப்களில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகிறது.

நினைவாற்றல் :

unknown node

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையை போல் தோற்றமளிக்கின்றன. இதனால் இது முதுமை மராத்தி, நினைவாற்றல் இழப்பு, மன தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயை தவிர்க்கவும் இது உதவுகிறது. மேலும் இது வாழ்நாளை கூட்டும் தன்மை உள்ளது.

இரத்த அழுத்தம் :

unknown node

வால்நட்டில் உள்ள ஒமேகா 3 மூளைக்கு நல்லது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாதுமைப் பருப்பு உதவுகிறது. மேலும் ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது.

சரும பிரச்சனை :

unknown node

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளைமையான தோற்றத்தை தரும். வைட்டமின் பி7 என்ற பயோட்டின் உள்ளதால் முடி உதிர்வதை தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதி தன்மைக்கும் உதவுகிறது.