Breaking: இந்தியாவில் மீண்டும் 50 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு..!

Corona damage reaches 50,000 again in India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 8 ஆயிரம் அதிகமாக உள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,00,28,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,90,660 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,43,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 29,46,39,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.