அவகேடாவில் உள்ள அற்புதமான... ஆரோக்கியமான மருத்துவ குணங்கள்....!!!

அவகேடா பற்றி அனைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் மாத்திரமே பார்த்திருக்க வாய்புள்ளது. ஏனென்றால் இது சந்தைகளில் பார்ப்பது அரிது. பெருநகரங்களில்

அவகேடா பற்றி அனைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் மாத்திரமே பார்த்திருக்க வாய்புள்ளது. ஏனென்றால் இது சந்தைகளில் பார்ப்பது அரிது. பெருநகரங்களில் உள்ளவர்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அவகேடா :

unknown node

அவகேடா பச்சை நிறத்தில் காட்சி அளித்தாலும் இது பழ வகையைச் சேர்ந்த கனிதான். இந்தப்பழம் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் அதிகம் விளைகிறது. மற்ற வெப்ப மண்டல பிரதேசங்களிலும் பரவலாக விளைகிறது.

20-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமான வணிக பயிராக இல்லாததால் குறைந்த அளவிலேயே தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஹிமாலயாவில் பயிரிடப்படுகிறது.

சத்துக்கள் :

‘‘100 கிராம் அவகேடாவில் கலோரிகள் – 160 Kcal, கார்போஹைட்ரேட் – 8.5 கிராம், நார்ச்சத்து – 6.7 கிராம், ஒன்றை அபூரிதக் கொழுப்பு அமிலம் – 9.8 கிராம், பல அபூரிதக்கொழுப்பு அமிலம் 1.8 கிராம்,  பூரிதக் கொழுப்பு – 2.1 கிராம், புரதம் – 2 கிராம், ஒமேகா 3 – 110 மி.கிராம், ஒமேகா6 – 168 கிராம், வைட்டமின் சி – 10 மி.கிராம், வைட்டமின் ஈ – 2.1 மி.கிராம், ஃபோலேட் – 81 மி.கிராம்,  வைட்டமின் ஏ – 146 IU, வைட்டமின் கே – 21 mcg, பாஸ்பரஸ் – 52 mg, பொட்டாசியம் 485 mg, கால்சியம் -12 mg போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது :

உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதயத்தின் முறையான செயல்பாட்டுக்கும் உகந்த பொட்டாசியமும் உள்ளது. இதில் இரும்புச்சத்தின் தன்மையை அதிகரிக்கவும் உடல் ஊக்கத்தை அளிக்கிற தாமிரமும் அதிகம் உள்ளது.

unknown node

‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் வயிறு மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு நல்லது. இதில் கண்களைப் பாதுகாக்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்பு தேய்மானம் மற்றும் வலியை போக்குகிறது.

நீரிழிவு நோய் :

அவகேடாவில் மிகக் குறைந்த அளவிலேயே சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உள்ளதால் நீரிழிவு நோய்க்கும் மிகவும் சிறந்தது. மிகக் குறைந்த சர்க்கரை உணவு வகைகளில் அட்டவணையில் அவகேடா பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் காக்கிறது.’’

unknown node

குறிப்பாக இந்தப் பழத்தில் 75 சதவீதம் நல்ல கொழுப்பு உள்ளது. 60 சதவீதம் பொட்டாசியம் இருப்பதால் வாழைப்பழம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களை விட கூடுதலாக நல்ல கொழுப்பு உள்ளது.