நம் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விதவிதமாக செய்து கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
முட்டை – 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சோடா – ஒரு துளி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் புதினா இலையை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அதில் உப்பு, கரண் மசாலா, சோடா ஆகியவற்றை போட்டு, நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் தவாவை அடுப்பில் வைத்து, அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளை தூவ வேண்டும். பின் ஆம்லெட்டை திருப்பி போட்டு பொரிந்ததும் எடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா ஆம்லேட் தயார்.