சுவையான இஞ்சி ரசம் வைப்பது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

வேக வைத்த துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி

ரசப் பொடி  – ஒரு தேக்கரண்டி

மிளகு, சீரகம் – ஒரு தேக்கரண்டி

புளி – தேவைக்கேற்ப

பெரிய தக்காளி – ஒன்று

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

கடுகு,சீரகம், பெருங்காய தூள் – கால் தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

இஞ்சி – ஒரு துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி  – தேவைக்கேற்ப

உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், இஞ்சியை தோல் சீவி விட்டு விழுதாக அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றினை மேலாக வடித்து வைத்துக் கொண்டால், சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

பின் ஒரு பாத்திரத்தில், புளி, வேக வைத்த பருப்பு, தக்காளி, உப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, புளிக்க கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் கொத்தி வருமுன் ரசப் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் நுரைத்து வந்தவுடன் கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சி சாற்றை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான இஞ்சி ரசம் தயார்.