நாம் தினமும் விதவிதமான குழம்புகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
வெந்தயம் – 4 தேக்கரண்டி
வரமிளகாய் – நான்கு
மல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு -8 பல்
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கருவேப்பிலை உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் பூண்டை உரித்து வைக்க வேண்டும். வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவேண்டும். வரமிளகாய், மல்லி, சீரகம் மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அரைத்து வைக்க வேண்டும்.
பின் தேங்காயை தனியாக அரைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து நன்கு 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவேண்டும். வதங்கியதும் நறுக்கின வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு, வதக்கவேண்டும். அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்க்கவேண்டும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான வெந்தய குழம்பு தயார்.