5 நிமிடத்தில் அட்டகாசமான கேரட் வடை எப்படி செய்வது...?

Come learn how to make gorgeous carrot batter

வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கேரட்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி தழை

கருவேப்பில்லை

பொட்டு கடலை

பச்சை மிளகாய்

எண்ணெய்

உப்பு

பெருங்காயத்தூள்

செய்முறை

கலவை :முதலில் கேரட்டை நன்றாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கிண்ணத்தில் பொட்டு கடலையை அரைத்து கொட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வடை :பின் வடை போல தட்டி எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி,எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான கேரட் வடை தயார்.