ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு.... எப்படி வைப்பது?

Many people do not like cantaloupe. This is because of the bitterness that can be seen in it. But let's find out how to make this cantaloupe in Andhra style in a less weird way.

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

பாகற்காய்

எண்ணெய்

உப்பு

எள்

சீரகம்

வெங்காயம்

தக்காளி

பூண்டு

புளி

கடுகு

வெந்தயம்

காய்ந்த மிளகாய்

மஞ்சள்தூள்

மல்லித்தூள்

மிளகாய்த்தூள்

செய்முறை

பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு சட்டியில் எள் மற்றும் சீரகத்தை பொன் நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக வதக்கி மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பாகற்காயை இவற்றுடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதங்க விடவும். அதன் பின் புளிக்கரைசல் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதனுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.