தக்காளி : சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தக்காளி விலையானது நேற்றைய நாளில் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.45-க்கு விற்பனை ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலங்களில் அடித்த வெயிலாலும், பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து நேற்று கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை ஆனது, அதிலும் சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டது. அன்றாட […]
தக்காளி : நம் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. அதிலும் தக்காளியின் விலையானது ராக்கெட் வேகத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளி நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூ.40 என்று விறக்கப்பட்டது. இன்றைய […]
Iron vessles-இரும்பு பாத்திரத்தில் எந்த உணவுகளை சமைக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். மாறிவரும் நவீன உலகில் சமையல் பாத்திரங்கள் பல வந்து விட்டாலும் தற்போது இரும்பு பாத்திரத்தின் நன்மைகளை அறிந்து மக்கள் அதை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஆனால் எந்த உணவு பொருள்களையெல்லாம் சமைக்க கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு இல்லை. சில உணவுகளை இரும்புடன் கலக்கும்போது அது எதிர் வினைகளை உண்டாக்கி நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இரும்புடன் சேரக்கூடாத உணவுகள்: அமிலத்தன்மை […]
சில காய்களை நம் உணவில் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் பச்சையாகவும் சாப்பிடுவோம். தக்காளி சேர்க்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். உணவுகளில் மட்டும் இல்லாமலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அழகான பழம். இந்த தக்காளியை வைத்து நாம் இன்று தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: தக்காளி=1. 1/2 கிலோ கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்=1 ஸ்பூன் நல்லெண்ணெய் =200 ml புளி =100 கிராம் மிளகாய்த்தூள் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு […]
தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக, அதன் விலை வெளிச்சந்தைகளில் உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதி விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. அதன்படி, சென்னை, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒருகிலோ 40 முதல் […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆனால், வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என […]
தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேரளாவிலும் தற்பொழுது தக்காளியில் வரத்து குறைந்துள்ளதால், […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த […]
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி 120 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வருகிற நாட்களில் 120 […]
பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை. இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை […]
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளதுடன், தமிழகத்தில் தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி […]
கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளியின் விலை 2 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளிகளை வீதிகளில் கொட்டி சென்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் நகரில் காய்கறி விற்பனை செய்யும் மொத்த சந்தையில் தக்காளியின் விலை நேற்று இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விலை மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் பருவகால மழையும் தொடங்கியுள்ளதால் தக்காளிகளை சேகரித்து வைத்து பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி பயிர் செய்த […]
காலை உணவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். ஏனென்றால் காலை நேர உணவை தவிர்ப்பதன் மூலமாக உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே தான் காலை நேரத்தில் ராஜா போல சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது அவசரமான ஏதாவது ஒரு காரணங்களைக் கூறி காலை உணவை தவிர்ப்பது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதே சமயம் அவசரமான நேரம் என்பதற்காக காலையில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம் […]
பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாஸ்தா தக்காளி வெங்காயம் கடுகு பூண்டு கருவேப்பில்லை மிளகாய் தூள் மல்லி தூள் முட்டை கொத்தமல்லி மிளகு தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் […]
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் வெங்காயம் பெருங்காயம் எண்ணெய் உப்பு கொத்தமல்லி பூண்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கறிவேப்பிலை செய்முறை முதலில் […]
சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் […]
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, […]
பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து […]