B.Sc முடித்திருந்தால் சமூக சுகாதார அதிகாரி வேலை...ரூ.40,000 வரை சம்பளம்.!

State Health Society: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்தில் சமூக சுகாதார அலுவலர் (CHO) பணிக்கான அறிவிப்பை பிகார் மாநில

State Health Society vaccency

State Health Society:தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்தில் சமூக சுகாதார அலுவலர் (CHO) பணிக்கான அறிவிப்பை பிகார் மாநில சுகாதார சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SHS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமானState Health Societyஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு 30-04-2024 அன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்

சமூக சுகாதார அலுவலர் (CHO) – 4500

தகுதி

B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

வயது

குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 42 ஆகவும் இருக்க வேண்டும். BC, EBC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் SC, ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 ஆக விதிகளின்படி தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 எனவும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SC, ST பீகார் குடியுரிமை கொண்ட ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு ரூ.250 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

சம்பளம்

மாதம் ரூ.32,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணச் சரிபார்ப்பின் போது, இந்திய நர்சிங் கவுன்சிலில் எந்த மாநில நர்சிங் கவுன்சில் என்கிற நிரந்தரப் பதிவை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இறுதித் தேர்வு வைக்கப்பட்டு தகுதி மற்றும் வகை வாரியான காலியிடத்தை நிரப்பப்படும்.