அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு :மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையில் இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணி தொடர்பான அனைத்து விவரங்களை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி
15-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
31-07-2024
காலியிட விவரங்கள் :
பதவி
காலியிடம்
வழக்கு பணியாளர்
2
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதலில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
இந்த வேலைக்காக பணியமர்த்தப்படும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020, என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியும் விருப்பமும் உடயர்வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://madurai.nic.in/notice_category/recruitment/பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அல்லது இந்தPDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
