மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.
இன்று மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்...!!
World Water Day is celebrated on March 22. It is well known that we can not live without water, as the world does not go without water. Only 30% of the land is land area. The remaining 70 percent is water drain. But today, the earth is deprived of enough water to provide water for people living in that 30 percent. The fact that it is the human race is the undeniable fact. We have been declared as World Water Day from March 1993 to March 22. But every year the world's billions of people are not in a state of water. There is no need for drinking water to increase their drinking water. People in many areas have been forced into drinking water, where they can not meet the need. The consequence is severe diseases. Hence, in the day of World Water Day, we will keep in mind that we will keep our lives alive and not be polluted by water.