அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை

This year's new uniforms for the government school students

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த கல்வி ஆண்டில்  1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு  கரும் பச்சை நிற கால் சட்டையும்,இளம் பச்சை நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுகிறது .

அதே போல், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு சந்தன நிற கால் சட்டையும்,சந்தன நிற கோடிட்ட மேல் சட்டையும் மாணவியருக்கு கூடுதலாக சந்தன நிற கோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

ஏற்கனவே, கடந்த கல்வி ஆண்டில்  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.