இன்று முதல்...9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

The School Education Department has announced that the first schools will be open today for students studying from 9 to 12th class.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (3-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர்,8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்தார்.

இதனால் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வழியிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.இந்த நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில்,9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும்,8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜன.10 வரை விடுமுறை நீட்டிக்கப்டுகிறது என்றும் ஜன.10 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து,அவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில்,தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு இன்று முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.இதற்கு அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.