இன்று முதல் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல்

தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“கோவை,சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி,பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு பட்டயப்படிப்பு முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.அதன்படி, விண்ணப்பதரார்கள்http://ptbe-tnea.comஎன்ற இணையத்தில் ஆகஸ்டு 3-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்,இணையதள வசதி இல்லாத நிலையில்,விண்ணப்பதாரர்கள்  தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் எனவும்,நடப்பு கல்வியாண்டில் பகுதிநேர இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பான தகவல்களுக்கு0422-2590080, 9486977757என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.