ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை,சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி,பர்கூர் […]
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி- பதில் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக உள்ளன. 2022-2023-ஆம் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி […]