நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு ! நாளை மீண்டும் தொடக்கம்

The medical consultation for the general public, which was postponed due to the storm, is set to resume tomorrow.

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை மீண்டும் தொடங்குகிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை  இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

அதாவது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை அதாவது 30 ஆம் தேதி நடைபெறும் என அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் நாளை தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.