#BREAKING : நாளை முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை -தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தமிழகத்தில்  நடைபெற்று

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தமிழகத்தில்  நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தமிழகத்தில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் தமிழக அரசின்  முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .23 24 26 31 ஆகிய 4 தேதிகளில் விடுமுறையை சனிக்கிழமைகளில் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு வகுப்புகள் நடத்தி ஈடு செய்ய வேண்டும்.ஜனவரி 2-ஆம் தேதி முதல் தான் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்கும் என்று  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.