தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
unknown nodeதமிழகத்தில் 2019 ஆண்டு முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
unknown nodeஇந்த நிலையில்,அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை (செப்.15) முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU