நாடு முழுவதும் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 6 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உலகளவில் கவலைகள் வளர்ந்து வருகின்றன, கடல்களில் கிட்டத்தட்ட 50% ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டிக்கிடக்கிறது.இது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மனித உணவு பொருட்களில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன . இதன் வெளிப்பாடாக ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஆறு பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தியின் பிறந்தநாள் […]
தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்தது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்தது தமிழக அரசு. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, […]
புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடைபெற்றது. இதன் பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019 ஆண்டு முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் […]