கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 6 நாள் நேரடி வகுப்பு – உயர்கல்வித்துறை!

Higher Education Secretary Apurva has announced that a 6-day live class will be conducted in colleges and universities.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 6 நாள் நேரடி வகுப்பு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருட காலமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு ஆறு நாட்கள் இனிமேல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ள செமஸ்டர் தேர்வுக்கு முன்னதாகவே மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 6 நாள் நேரடி வகுப்பு – உயர்கல்வித்துறை!