நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்வழங்கியது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கபடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது […]
பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் தேர்வே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை விளக்கம். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் […]
மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு. ஆன்லைன் தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு குறித்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் WhatsApp-ல் அனுப்பும் விடைத்தாள்களும், நேரடியாக Courier மூலம் அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே Valuation செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் […]
ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதை தொடர்ந்து […]
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 6 நாள் நேரடி வகுப்பு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருட காலமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு ஆறு நாட்கள் இனிமேல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ள […]
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை அண்ணா நகரை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் மகள் மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்காக உதவி இருப்பது பாராட்டுக்குரியது. தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். […]
டில்லியில் கல்வி தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வியும் அறிவும் புத்தகங்களுடன் மட்டும் நின்று விடாது. மனிதர்களின் அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி பெற செய்வதே கல்வியின் நோக்கம். இது புது கண்டுபிடிப்புகள் இல்லாமல் சாத்தியம் இல்லை. நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, கல்வி துறையில் புத்தாக்க முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கல்வி துறையில் 2022ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் […]
உலகத்தில் எந்தெந்த நாடுகளில் டாக்டர் பட்டம் (PhD graduates),அதாவது முனைவர் பெற்ற பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் என்ற பட்டியலை இன்று உலக பொருளாதார மையம் (World Economic Forum) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா 67,449 பட்டதாரிகளுடன் முதல் இடத்திலும்,ஜெர்மனி 28,147 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 25,020 பட்டதாரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 24,300 பட்டதாரிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 16,039 பட்டதாரிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் 13,729 பட்டதாரிகளுடன் ஆறாவது இடத்திலும்,தென்கொரியா 12,931 பட்டதாரிகளுடன் […]