அஞ்சுகிராமத்தில் பள்ளி மாணவர் மின்கம்பத்தில் பைக் மோதி பலி!

முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த  2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் - குமாரபுரம்

அஞ்சுகிராமம்: முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த  2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் – குமாரபுரம் தோப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.  குமாரபுரம் தோப்பூர் வரும்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோவில்  நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொண்டு  சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதித்து பார்த்து மணிகண்டன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.