தஞ்சையில் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை. அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா். மதம் […]
மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் கடந்த 3-4 நாட்களாக 19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் கடந்த 3-4 நாட்களாக 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத […]
பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ட்வீட். சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்று என உருக்கமாக எழுதியுள்ளார். இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், […]
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார். இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கோவையில், பள்ளி சிறுவன் தனது பள்ளி கட்டணத்திற்காக […]
திருப்பூர் 3-ம் வகுப்பு மாணவன் மாவட்ட ஆட்சியருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் நன்றி கடிதம் எழுதியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் தரணேஷ், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்னும் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். திருவத்திரம் என்னும் பகுதியில், நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட மாணவியிடம், கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகியுள்ளார். மேலும், அவர் அந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அம்மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, கர்ப்பமான மாணவி, தனது தாயாரிடம் நடந்த […]
அஞ்சுகிராமம்: முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் – குமாரபுரம் தோப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். குமாரபுரம் தோப்பூர் வரும்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் […]