வருமான வரித்துறையினர் போல நடித்து 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் ....!

In Pollachi, a mysterious gang has robbed the house of a quarry owner by pretending to be an income tax officer.

பொள்ளாச்சியில் வருமான வரித்துறையினர் போல நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டிலிருந்து 20 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தான் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அடையாளம் காண்பித்து  வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்பு அவர்கள் வீட்டை விட்டு சென்றதும், வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சலிங்கம் போலீசில் புகார் அழித்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவி உதவியுடன் மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.