டெல்லி : கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் நிதிநிலை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்ததால், நிச்சயம் பெரிய அளவில் நடுத்தர மக்கள் மத்தியில் வரிச்சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வருமானவரி கட்டவேண்டியதில்லை. மற்ற வரி விகிதங்கள் பின்வருமாறு… புதிய வருமான வரி விகிதம் : […]
IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு […]
Congress: வருமானவரித்துறை, ரூ. 65 கோடி வரிபாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. […]
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் வங்கி கணக்குகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டாக காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மாக்கன் குற்றசாட்டை முன்வைத்தார். இதுபோன்று, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். அதில், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, […]
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் […]
ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை. மதிப்பீட்டு ஆண்டு (AY) 2022-23க்கான வருமானத்தைத் தாக்கல் செய்ய, வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் உள்நுழைய முயற்சிக்கும் போது முன்பு அவர் அமைத்த கடவுச்சொல்லை நிராகரித்தது. ஆதார் OTP ஐப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன, மேலும் அவரது பான் எண்ணுடன் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வந்தது. அவரது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க முயற்சித்தபோது, […]
பொள்ளாச்சியில் வருமான வரித்துறையினர் போல நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டிலிருந்து 20 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தான் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக அடையாளம் காண்பித்து வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீட்டை […]
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது,பெட்ரோல்,டீசல் மீதான வரிகளைக் குறைத்தல்,வருமான வரிச் சலுகைகள்,150 நாள் வேலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாகவும்,நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் எனவும்,ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல் ஆகியவற்றுடன் […]
சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை வருமான வரித்துறை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பதவியேற்பு. தமிழ்நாடு, புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 1987-ல் வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் 34 ஆண்டுகால பணியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான அகடாமியில் பயிற்சி பெற்ற பிறகு, சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். 34 ஆண்டுகளாக அவரது பணியில் மதிப்பீடு, தீர்ப்பாயம் […]
சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலமாகியுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள்,பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. மேலும்,சென்னையில் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களாக சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்றவர். மேலும், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ‘இ-பதிவு’ தளத்தை மாற்ற இருப்பதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள ‘இ-பதிவு’ தளம் இயங்காது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வோர் இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற ‘இ-பதிவு’ தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஜூன் 7 முதல் www.incometax.gov.in என்ற புதிய ‘இ-பதிவு’ தளம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும்,மேலும்,இந்த புதிய தளமானது நவீனமான மற்றும் எளிமையான […]
வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை வெளியிட வேண்டும். அந்தவகையில் கடந்த வருடம் 2020 ல் வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். அதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பாய்டனின் வருமானத்தை விட துணை அதிபர் கமலா ஹாரிஷின் வருமானம் 10 […]
வரி செலுத்துவோர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா காரணமாக அக்டோபர் 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு […]
கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உலக ஒப்பந்தங்களிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்று உள்ளார். இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் […]
கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதாவது:தேர்தலின்போது நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றிருந்த செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]
2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு, குறு நிறுவனங்களும் சரிவர தங்கள் ஸ்தாபனத்தை இயக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு […]
ராஜஸ்தானில் வருமானவரித்துரை அதிகாரி லஷ்மண் சிங், வருமானவரி ஆய்வாளர் பிரேம் சுக் திதெல், இவர்கள் இருவரும் நாக்பூரில் பணியாற்றுபவர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சுரேஷ் பரீக் ஆகிய 3 போரையும் சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது புகார் அளித்த நபரிடம் இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணக்கில் உள்ள சிலபல விவகாரங்களை சரிக்கட்ட ரூ.5 லட்சம் கொடுத்தால் சரி செய்யலாம் என்றும் இதனை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் கொடுக்குமாறும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த தகவலை அடுத்து புகார் அளித்த […]