சென்னை:நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைப்போல,தஞ்சை,திருவாரூர்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்றும்,நாளையும் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.