கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான   கருணாநிதியின்  முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கபடுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான   கருணாநிதியின்  முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கபடுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது .திமுக தொண்டர்கள்  ஆங்காங்கே கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது .இந்த பேரணியானது அண்ணாசாலையில் இருக்கும் அண்ணாசிலையில் இருந்து தொடங்கியது இப்பேரணியில் கனிமொழி ,ஆ.ராசா  உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .தமிழக முழுவதுமிருந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டரகள் ஆயிரகணக்கானோர்  கலந்து கொண்டனர் .

அதன் பின்னர் கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை  அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் .