அடேங்கப்பா..!மீண்டும் எகிறியது தங்கம் விலை – சவரனுக்கு ரூ.736 உயர்வு!

In Chennai, the price of 22 carat jewellery gold rose by Rs 736 per razor to Rs 37,168 per razor.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ஒருசவரன் ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

அதன்படி,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.36,960 க்கும், அதேபோல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4620-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில்,தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ.4,646-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.71.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.