இறந்த பெண் காவலரை தோளில் சுமந்து சென்ற துணை காவல் ஆணையர்..!

சென்னை வேப்பேரியை சார்ந்தவர் ஸ்ரீதேவி (48) தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம்  உடல்நிலை

சென்னை வேப்பேரியை சார்ந்தவர் ஸ்ரீதேவி (48) தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம்  உடல்நிலை குறைவால் இறந்துள்ளார்.இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என ஸ்ரீதேவி வளர்ப்பு மகன் முனுசாமி கூறினார்.

unknown node

இதனால் இவரது இறுதி சடங்கு12-ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் ஸ்ரீ தேவியின் உடலை துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி , ஆய்வாளர் ரமணி , இந்திராணி மற்றும் வரலட்சுமி ஆகியோர் தங்கள் தோளில் ஸ்ரீதேவி உடலை சுமந்து கொண்டு  காசிமேடு மயானம் வரை சென்றனர்.

unknown node

அங்கு  ஸ்ரீதேவி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.