வீடு இல்லாத ஏழைகளுக்கு அதிமுக அரசு வீடு கட்டி தரும் – முதல்வர்!

Chief Minister Edappadi Palanisamy has said that houses will be built for the homeless poor on behalf of the AIADMK government.

வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னை அசோக் நகரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை திறம்பட எதிர்கொண்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பின் சென்னை குடிநீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் தான் எனவும், தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.