வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னை அசோக் நகரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கொரோனா […]
கொரோனா மரணங்களை விட அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மின்தடை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் 40 நிமிடம் அளவிற்கு மின் […]