இன்றைய ராசி பலன்கள்.! ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்கள்.!

horoscope23

Today horoscope- பங்குனி மாதம் பத்தாம் தேதி [மார்ச் 23 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. உங்களின் சிறப்பான தகுதிகளை வெளிக்கொணர்ந்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நகைச்சுவை அணுகும் முறையை மேற்கொள்வீர்கள். உங்கள் உழைப்பிற்காக ஊக்கத்தொகை பெறுவீர்கள். இன்று நீங்கள் திடமாக காணப்படுவீர்கள்.

ரிஷபம்:

இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும் . பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகள் காணப்படும் ,பொறுமையை மேற்கொள்வது அவசியம் .உங்கள் துணையுடன் அகந்தை போக்கை காண்பீர்கள். இன்று செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குளிர்ச்சி உணவுகளை தவிர்க்கவும்.

மிதுனம்:

இன்று உங்கள் செயல்களை அறிவுபூர்வமாக அணுக வேண்டும், பொறுமை தேவை. உங்கள் பணிகளை செய்யும் போது கவனம் தேவை. உங்கள்  துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் .நிதி நிலைமை சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.

கடகம்:

இன்று உங்கள் இனிமையான வார்த்தைகளால் அனைவரையும்  மகிழ்விப்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் .உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் .நிதிநிலைமை செழிப்பாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

சிம்மம்:

இன்று உங்கள் எதிர்காலத்தை முன்னேற்ற வழி  கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும் ,சக பணியாளர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. பண வரவு குறைந்து காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் குறைவு ஏற்படும்.

கன்னி:

இன்று ஏற்படும் அவ நம்பிக்கையை தவிர்க்க வேண்டும், உறுதியான மனநிலையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். செலவினங்கள் அதிகரிக்கலாம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

துலாம் :

இன்று உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவீர்கள் .இந்த உணர்வை தவிர்க்க பிரார்த்தனை மேற்கொள்வது அவசியம் .பணி நிமித்தமாக பயணம் ஏற்படும் .பணிச்சுமை அதிகம் இருக்கும் .உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை தேவை .தேவையற்ற செலவுகள் ஏற்படும் ,தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை தக்கவைக்கலாம் .

விருச்சிகம்:

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சக பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது ,ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

இன்று மிகவும் சாதகமான நாள். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள் .பணியிட சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள் .உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஆறுதல் தரும். பணிச்சுமை அதிகமாக காணப்படும்  ,பணி நிமித்தம் காரணமாக பயணம் ஏற்படலாம் .உங்கள் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்:

இன்றைய பலன்கள் தாமதமாக கிடைக்கும் ,அதிக எதிர்பார்ப்பு கூடாது. திட்டமிட்டு பணி செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுங்கள் .நிதிநிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் ,உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பண செலவு செய்யலாம்.

மீனம்:

உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும், முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று பணியில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Indonesia Landslide
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS