இன்றைய ராசி பலன்கள்..! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்.?

horoscope 8

Today horoscope -மாசி மாதம் 25ஆம் தேதி[ மார்ச் 8 ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள் .புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நேரம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகிறது. உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று கணிசமான தொகை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

ரிஷபம்:

இன்றைய நாள் சுமாராக இருக்க காண்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது கடினமாக இருக்கும். உங்கள் பணிகள் சுமூகமாக நடைபெற புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

மிதுனம்:

இன்றைய தினத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும். பணியில் தவறு நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் அன்பை வளர்க்க முயலுங்கள். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:

இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் பரீட்சயமானவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள், முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதி  நிலைமை செழிப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகிறது.

சிம்மம்:

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பக்தியில் ஈடுபடுவதற்கும் இறைவழிபாட்டிற்கும் உகந்த நாள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடனான அணுகு முறையில் நேர்மை காணப்படும். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று நீங்கள் ஆறுதல் தேடி கோவிலுக்கு செல்வீர்கள். உங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டும் .துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். இன்று பண வரவு செலவு இரண்டும் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இனிப்பான உணவுகளை தவிர்க்கவும்.

துலாம்:

இன்று நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டிய நாள். பணியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் அன்பான உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்று பணம் இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்:

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய இன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. பயணம் அல்லது வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் இனிமையாக பேசுவதன்  மூலம்  இதயத்தில் இடம் பெறுவீர்கள். பண வரவு அபரிவிதமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலன் அளிக்கும். சக பணியாளருடன் நல்லுறவு காணப்படாது. உங்களுடைய மனக்குழப்பத்தை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். நிதி வளர்ச்சியில் கட்டுப்பாடு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு தாமு தாமதம் ஏற்படும் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் நிதிநிலைமை சிறப்பாக இருக்காது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வுடன் தனிமையாகவும் அவநம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். இன்று அதிக பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவச் செலவிற்காக பணம் செலவு செய்ய நேரும் . ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை பற்றி உங்கள் துணையுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். இன்று உங்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay