திருநீறு பூசும் தீர்க்க தரசிகளே... சம்பந்தர் அருளிய திருநீறு பதிகம்... பூசும் போது படியுங்கள்... ஈசன் மலரடியை அடையுங்கள்...

இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல்  கிடைக்கின்றதோ அதே அளவிற்கான

நீறில்லாமல் கூடாது நெற்றி  என்றனர்  நம் முன்னோர்கள்.

அத்தகைய திருநீறின் சிறப்பு குறித்த சிறப்பு பதிகம்.

இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல்  கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை இந்த திருநீறு வைத்துக் கொள்வதாலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது இந்த திருநீரு. ‘நீறு’ என்றால் சாம்பல். திருநீறு என்றால் மேன்மை பொருந்திய  நீறு என்ற பொருளைக் குறிகின்றது.

unknown node

இதற்கு விபூதி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்ற பொருளை  தருகிறது. பிறப்பையும் இறப்பையும் இந்த பூமியில் அனுபவித்து கடைசியில் ஈசனை அடையச்செய்வது திருநீறு என்பது இதன் மூலமாகும். இத்தகைய திருநீறினை அணியும் முன் இதற்குறிய மந்திரத்தை கூறுவது இன்னமும் சிறப்பாக இருக்கும்.

திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

என்ற இந்த மந்திரத்தை தினமும் கூறி திருநீறி அணிந்து வந்தால் சகல சௌபாக்கியமும் பெற்று இறைவன் அருள் கிடைக்கும்.