இன்று தைத்திருநாள்...பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்..!

Find out the best time to celebrate Pongal today (14.01.2022) ahead of Taittiriya.

இன்று (14.01.2022) தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மகர சங்கராந்தி இந்த வருடம் மாலை நேரத்தில் பிறக்கவிருக்கிறது.

தைத்திருநாளை முன்னிட்டு இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில்,பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுவது அவசியம்.

அதன்படி,2022 ஆம் ஆண்டு பிலவ வருடம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.20 க்கு மேல் பிறக்கிறது.சூரிய பகவான் மகர ராசிக்கு மாலை 5.20-க்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.இதற்கிடையில்,உத்தராயண புண்ணிய காலத்தில் அதாவது காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக பிதுர் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்.அதனால் அதற்கு முன் மீன லக்னத்தில்,சந்திர ஓரையின் போது காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் தைப்பொங்கல் வைக்க சிறந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

எனவே,இந்த நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டு எல்லா வகையான செல்வங்களையும் அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழுங்கள்.