தை மாதத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் அற்புதமான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். தைப்பொங்கலின் சூரிய பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் சிறப்புகள் மற்றும் பொங்கல் வைக்கும் நேரம் பற்றி இப்ப பதிவில் தெரிந்து கொள்வோம்.. பொங்கல் சிறப்பு : தைத்திருநாளை அறுவடை தினமாகவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க கூடிய ஒரு திருநாளாகவும் உழவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் ஒரு உன்னதமான நாளாகும். பொங்கல் வைக்கும் நேரம் : இந்த வருடம் தை மாதம் அதிகாலை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. குறிப்பாக, நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த […]
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு […]
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடைபெறும். இதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் […]
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், 746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த […]
ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் […]
பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூ.1000 கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கொடுக்க ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 14 ஞாயிறு, 15ம் தேதி பொங்கல் என்பதால், அதற்கு முன்னதாக ஜனவரி 12 அல்லது 13ம் தேதியே பொங்கல் பணம் 1000 ரூபாயும், மகளிர் உரிமை தொகை ரூ.1000 […]
பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்! போகி பண்டிகைக்கு […]
பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ஏறத்தால 7 கோடி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளனர் எனவும்,இதன்காரணமாக,தமிழக போக்குவரத்துத் துறைக்கு சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி,ஜனவரி 11,12,13 ஆகிய […]
பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது, மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் […]
மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றார். இந்நிலையில்,புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில்,தற்போது முதல் காலியாக மகாலிங்கசுவாமி மடத்து […]
இன்று (14.01.2022) தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மகர சங்கராந்தி இந்த வருடம் மாலை நேரத்தில் பிறக்கவிருக்கிறது. தைத்திருநாளை முன்னிட்டு இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில்,பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுவது அவசியம். அதன்படி,2022 ஆம் ஆண்டு பிலவ வருடம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.20 க்கு மேல் பிறக்கிறது.சூரிய பகவான் மகர ராசிக்கு மாலை 5.20-க்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.இதற்கிடையில்,உத்தராயண […]
போகியன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக்கை பொதுமக்கள் எரிக்ககூடாது மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக போகி தினத்தன்று பொதுமக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்கள், டயர்கள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில், போகியன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக்கை பொதுமக்கள் எரிக்ககூடாது மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்;இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை முதல் நாளான ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்.தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும் எனவும்,அனைவருக்கும் தை முதல் நாளாம்,இனிய பொங்கல் – இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,திமுக உடன்பிறப்புகளுக்கு […]
தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘ தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரித் திங்கள் 7-ஆம் நாள் முதல், இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த […]
ஜனவரி-16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]