இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி தைப்பூச திருவிழா!

Dindigul: The Thaipusam festival at the Palani Murugan Temple started with flag hoisting without devotees.

திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை என்றும் 21 ஆம் தேதி நடைபெறும் தெப்ப உற்சவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து எனவும் தெரிவித்தார். மேலும்,ஜனவரி 12 ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்ற விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.முதன் முதலாக இந்த விழாவானது பக்தர்கள் இன்றி இன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி தைப்பூச திருவிழா!