தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.! இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து முருகன் […]
கொரோனா எதிரொலி காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிய […]
திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி […]
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை […]