#Breaking:எம்ஜிஆர் சிலை சேதம் – காவல்துறை அதிரடி!

Sekar has been arrested in connection with the damage to the MGR statue in Thanjavur based on CCTV footage.

தஞ்சை:எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் இரண்டடியிலானதிருவுருவச்சிலை மர்ம நபர்களால் இன்றுசேதப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு,அதிமுக இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

unknown node

இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,அவர் மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து,இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.