பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக கவுன்சிலர்!

A DMK councilor from Thiruvannamalai district has been hacked to death in broad daylight for killing an AIADMK leader.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை திமுக கவுன்சிலர் பங்க் பாபு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது முன் விரோதமாக இருந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்,  நேற்று காலை 11 மணியளவில் பங்க் பாபுவை திருவண்ணாமலை பைபாஸ் ரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அதிமுக பிரமுகரின் மரணத்திற்கு பாலி தீர்க்கும் விதமாக காபி குடித்து கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

தலையில் அதிகமாக வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் பாபு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக கவுன்சிலர்!