யூடியூப் பார்த்து நூதன முறையில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது...!

Five people have been arrested in Panruti in the Cuddalore district for brewing liquor while watching YouTube

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்ததால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிப்பேட்டை,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சந்தேகத்தின்பேரில் சில வீடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது,கேஸ் அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூதன முறையில் 5 பேர் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து,சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் ,பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து நூதன முறையில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது...!