ஈமு கோழி முதலீட்டு மோசடி – 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை..

Emu chicken investment scam - 3 jailed for 10 years ..

ஈமு கோழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட  3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ்,தமிழ்நேசன்,வாசு ஆகியோர் ஈரோட்டில் ஈமு கோழிவளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி,ரூ.2.7 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதனையடுத்து,121 முதலீட்டார்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று,ஈமு கோழி திட்டத்தில் மோசடி நடந்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,தற்போது விசாரணைக்கு வந்த வழக்கில்,ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2.47 கோடி அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.